தகாத உறவை கண்டித்த கணவர் கொலை - 7 பேருக்கு இரட்டை ஆயுள்

தகாத உறவை கண்டித்த கணவர் கொலை - 7 பேருக்கு இரட்டை ஆயுள்
தகாத உறவை கண்டித்த கணவர் கொலை - 7 பேருக்கு இரட்டை ஆயுள்

மேட்டூர் அடுத்த மேச்சேரியில் தகாத உறவை கண்டித்த கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி கல்கோட்டையை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பெருமாள்(34). இவரது மனைவி முத்தாள்(30) அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி(30) என்பவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெருமாள் முத்தாளை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, கடந்த 2014 ஆம் ஆண்டு கணேசன் (23), செம்பட்டையன் (27), பெருமாள் (34), நாகராஜன் (26), அருண் குமார் (25), பொம்மநாயக்கர் (46) உட்பட 7 பேருடன் சேர்ந்து பெருமாளை கொலை செய்தார். 

இது குறித்து உறவினர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தி உள்பட 7 பேரை  கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு மேட்டூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் தொடர்புடைய  7 பேருக்கும் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 7 பேரும் கோயபுத்தூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com