போலீசாரை மிரட்ட உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏற முயன்ற கைதிக்கு நேர்ந்த பரிதாபம்!

போலீசாரை மிரட்ட உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏற முயன்ற கைதிக்கு நேர்ந்த பரிதாபம்!

போலீசாரை மிரட்ட உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏற முயன்ற கைதிக்கு நேர்ந்த பரிதாபம்!
Published on

காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்தவெளி சிறைச்சாலையில், ஆயுள் தண்டனை கைதி கருப்பசாமி மின்சாரம் தாக்கி பலியானார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள புரசடை உடைப்பு திறந்தவெளிச் சிறை சாலையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களாக இவரைப் பார்க்க உறவினர்கள் யாரும் வராத நிலையில் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி, சிறை அதிகாரிகளிடம் பரோலில் வெளியே செல்ல அனுமதி கேட்டு வந்துள்ளார். ஆனால் அனுமதி வழங்க மறுத்ததாக கூறப்பட்ட நிலையில், சிறைத்துறை அதிகாரிகளை மிரட்ட சிறைச்சாலைக்குள் சென்ற உயர் அழுத்த மின்கம்பத்தில் கருப்பசாமி ஏறியுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக கைதி கருப்பசாமி தலையில் மின்கம்பி உரசி தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக சிறைக்காவலர்கள் அவரை மீட்டு, காளையார்கோவில் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கைதி கருப்பசாமி உயிரிழந்தார். கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com