\
“சசிகலாவின் ஒற்றை தலைமையை ஏற்போம் “ :  ராமநாதபுரத்தில் வலம் வரும் போஸ்டர்

“சசிகலாவின் ஒற்றை தலைமையை ஏற்போம் “ : ராமநாதபுரத்தில் வலம் வரும் போஸ்டர்

“சசிகலாவின் ஒற்றை தலைமையை ஏற்போம் “ : ராமநாதபுரத்தில் வலம் வரும் போஸ்டர்
Published on

ராமநாதபுரத்தில் ’மீண்டும் அம்மாவின் ஆட்சியை சின்னம்மா தலைமையில் அமைப்போம்’ என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், பாரதிநகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், “தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஒற்றை தலைமையை ஏற்று களப்பணி ஆற்றுவோம் சின்னம்மா தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

ராமநாதபுரம் அஇஅதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவர் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com