தமிழ்நாடு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து - முதல்வர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து - முதல்வர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு புறந்தள்ளியது இல்லை. அரசின் இந்த நல்ல முடிவை ஏற்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கல்விப் பணியை தொடர வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.