'சட்டமன்றத்தை முடக்கிப் பார்க்கட்டும்' - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

'சட்டமன்றத்தை முடக்கிப் பார்க்கட்டும்' - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
'சட்டமன்றத்தை  முடக்கிப் பார்க்கட்டும்' - வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 15-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘சட்டசபையை முடக்கும் நிலை ஏற்படும் - எடப்பாடி பழனிசாமி; மிசாவை பார்த்த என்னை மிரட்ட முடியுமா? மு.க.ஸ்டாலின்…மக்களை ஈர்ப்பது யார்?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

TAMIL SIBI.

சட்டமன்றத்தை முடக்குவது ஜனநாயக படுகொலை. முடக்கி பார்க்கட்டும் அவரை மக்கள் முடக்குவார்கள்.

தனி ஒருவன்

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறாத நிலையில்,மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை நகராட்சிக்கு பெற ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஆதரிப்போம் என்ற மனநிலையிலே மக்கள் உள்ளனர்..எனவே திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை!

பிரபு கிரிஷ்

ஆளுங்கட்சி அதிக இடங்களை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் பேசுகிறார்; எதிர்க்கட்சி நாங்கள் தான் என மக்களை நம்ப வைக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பேசுகிறார்! இந்த பேச்சுகள் மக்களை ஈர்க்காது,கடைசி நேர கவனிப்பே வெற்றியை தீர்மானிக்கும் என்பது இருவருக்கும் நன்றாக தெரியும்!

Npkanmani95 ☭

"ஆண்மையுள்ள ஒரு அதிமுகவினரை கூட இப்போது பார்க்க முடியவில்லை" என்ற நயினார் நாகேந்திரனின் கூற்றை அதில் உண்மை இல்லை என்று மறுக்கும் அளவில் செருக்கோடு அதிமுகவினர் நடந்து கொள்ளுங்கள் முதலில்!

யார் பெரியவர் என்பதை காட்டும் நேரமல்ல இது.. யார் சிறந்தவர் என்பதை காட்டுங்கள் மக்களுக்கு!!

Aathi Lingam

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல, மக்கள் முட்டாள்கள்.


BR_2073

எதிர்க்கட்சிகள் ஸ்டாலினுக்கு எதிராக ஓன்றும் செய்ய வேண்டாம். அவர் ஆட்சியின் முடிவில் மக்கள் நல்ல பாடம் புகற்றுவார்கள்

இதையும் படிக்கலாம்: துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப்போல் ஆளுநர்-வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com