தமிழ்நாடு
சென்னையில் சுற்றும் ஸ்டாலின் மதுரையில் போட்டியிடட்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
சென்னையில் சுற்றும் ஸ்டாலின் மதுரையில் போட்டியிடட்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் போட்டியிடட்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்க நாள் உறுதிமொழியை செல்லூர் ராஜூ ஏற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அதிமுக அமைச்சர்கள் நிற்கும் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனை ஏற்கத் தயார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

