“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்" - கமல்ஹாசன் ட்வீட்

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்" - கமல்ஹாசன் ட்வீட்

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்" - கமல்ஹாசன் ட்வீட்
Published on

உங்கள் நடுவிலிருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் என்று மக்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்

இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள காணொலியில், “ நலமாக உள்ளேன், நான் நலம்பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம், அதற்கு நிகரான மற்றொரு காரணம் உங்கள் அன்பு. உள்ளாட்சியில் சுயாட்சிக்காக குரல்கொடுத்துக்கொண்டிருக்கும் நம் மய்யம், கிராம சபையை பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நம் அடையாளமாக இருந்துவிடாமல், நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் நாம் எதற்காக குரல் கொடுத்தோமோ, அதே களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

உங்கள் நடுவிலிருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு வேலையை பாருங்கள். எப்படி இந்தக் கோவிட் காலத்தில் உயிர் பயமின்றி நம் தோழர்கள் பணிபுரிந்தார்களோ, அதே துணிச்சலுடன் ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இதை நீங்கள் செய்யவேண்டும். இந்த தொற்று நீங்கிவிட்டது அல்லது போய்விடும் என்ற நம்பிக்கையில் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணமாக நானே இங்கு நின்றுகொண்டிருக்கிறேன். இந்தத் தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, முன்ஜாக்கிரதையும், தற்காப்பும் மிகவும் அவசியம். அதை செய்துகாட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com