ஓசூர்: குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை... அச்சத்தில் பொதுமக்கள்

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில், குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
leopard
leopardகோப்புப்படம்

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் தாலுகாவுக்கு உட்பட்ட கோபசந்தரா, முத்தாநல்லூர் பிரதான சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில், அங்குள்ள ஒரு குடியிருப்புக்கு அருகே சிறுத்தை ஒன்று உலா வந்த காட்சியை அப்பகுதி பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leopard Roaming
Leopard Roamingpt desk

ஆனெக்கல் தாலுகாவின் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறிவரும் நிலையில், இவ்விவகாரம் வனத்துறைக்கு பெரும் தலைவலியாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தையை பிடிக்க ஏற்கெனவே வனத்துறை கூண்டு வைத்துள்ள நிலையில், சிறுத்தை கூண்டில் அகப்படாமல் தப்பித்து வருகிறது. இதனால் வனத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com