சீமைக்கருவை மரங்களை அகற்ற சட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...

சீமைக்கருவை மரங்களை அகற்ற சட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...
சீமைக்கருவை மரங்களை அகற்ற சட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...

சீமைக்கருவை மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்றுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சீமைக்கருவை மரங்களை அகற்ற சிறப்பு சட்டத்தினை 2 மாதங்களுக்குள் இயற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சீமைக்கருவை மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு இடங்களில் உள்ள கருவை மரங்களை மாநாகராட்சி அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் தனியார் இடங்களில் உள்ள கருவை மரங்களை நிலத்தின் உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றவில்லை என்றால் அரசே அதை அகற்றி, அதற்கான செலவுத் தொகை போல் இரண்டு மடங்குத் தொகையை நிலத்தின் உரிமையாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் சீமைக்கருவை மரங்களை அகற்றும் பணியில் ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் 15% சீமைக்கருவை மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் 15 நாட்களில் சீமைக்கருவை மரங்களை அகற்ற அதிகாரிகளின் நடவடிக்கை தேவை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com