வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க சட்டத்துறைக்கு பரிந்துரை - தேர்தல் ஆணையம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க சட்டத்துறைக்கு பரிந்துரை - தேர்தல் ஆணையம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க சட்டத்துறைக்கு பரிந்துரை - தேர்தல் ஆணையம்

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையத்திடம் பல பரிந்துரைகள் செய்யப்பட்டன.

அதில் குறிப்பாக முதலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரடியாக அல்லாமல் நாமினி ஒருவரை நியமித்து வாக்களிக்கலாம். இரண்டாவது, எந்த நாட்டில் உள்ளனரோ அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச்சாவடிகள் வைத்து வாக்களிக்கலாம். மூன்றாவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் லிங்க் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க செய்யலாம் என்ற மூன்று முறைகள் பரிந்துரைக்கப்பட்டன.

இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை கடந்த மாதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாரம் யெச்சூரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/N8EIYjkkn_0" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com