\
பொள்ளாச்சி விவகாரம் : 2 ஆவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை

பொள்ளாச்சி விவகாரம் : 2 ஆவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை

பொள்ளாச்சி விவகாரம் : 2 ஆவது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் சில கல்லூரிகளுக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, திருவண்ணாமலை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி என பல இடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கல்லூரிகளில் இருந்து ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேற்று நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் பாலியல் கொடூர விவகாரத்தில் போராட்டத்தை தடுக்க பொள்ளாச்சியில் சில கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுமலை சாலை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொள்ளாச்சியின் பல முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com