நாளை தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

நாளை தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

நாளை தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து
Published on

தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நமது பண்பாட்டையும், கலாசார சிறப்புகளையும் கொண்டாடும் திருநாள் தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிட்டுள்ளார். கருணை. வீரம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம் போன்ற சிறந்த குணங்களால் உலகம் முழுவதும் அறியப்படும் தமிழர்கள் அமைதி மற்றும் வளத்திற்கான முன்னோடிகள் என்று ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com