தலைவர்களின் வாக்குறுதிகள் முதல் அதிகரிக்கும் கொரோனா வரை... முக்கியச் செய்திகள்

தலைவர்களின் வாக்குறுதிகள் முதல் அதிகரிக்கும் கொரோனா வரை... முக்கியச் செய்திகள்
தலைவர்களின் வாக்குறுதிகள் முதல் அதிகரிக்கும் கொரோனா வரை... முக்கியச் செய்திகள்

தலைவர்களின் வாக்குறுதிகள் முதல் அதிகரிக்கும் கொரோனா வரை என இன்றைய முக்கியச் செய்திகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. முதலமைச்சர் எடப்பாடியிலும், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரிலும் முகாமிட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் மாநிலம் சார்ந்த உரிமைகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படாது என சென்னையில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியா அல்லது எம்ஜிஆர் ஆட்சியா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கும் என நெல்லையில் வாக்குசேகரித்த அமித் ஷா கூறினார்.

பணம் தருபவர்களை செல்போனில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதியளித்தார்.

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசியதாக திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் லியோனி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை மீறி வழிபாட்டுத்தலம் முன் பரப்புரை செய்ததாக கூறி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தலை ஒட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், இருப்பு வைக்க கடைகளில் மதுக் குடிப்போர் குவிந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தேர்தல் தொடர்பாக அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக நிர்வாகியின் 2 வேன்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து 2ஆவது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியது. தேவைப்படும் பட்சத்தில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு நாட்கள் 27 மாவட்டங்களில் வெயில் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com