பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள், தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், செயற்கைக்கோள் புகைப்படத்தைக் கொண்டு சிறந்த நிபுணத்துவத்துடன் விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். மின்னணு மற்றும் உற்பத்தி சார்ந்த இந்தியாவை கட்டமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அவசரச் சட்டம் கொண்டு வந்து உச்சநீதிமன்ற அனுமதியை பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். விவசாயிகளின் மறுவாழ்வுக்குத் தேவையான நிதியை மாநில அரசும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து தேசிய பேரிடர் நிதியில் இருந்து மத்திய அரசும் வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். பொங்கல் இனிப்பதுபோல், தமிழ் மக்களின் வாழ்வு செழிக்கட்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.