\
கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த தலைவர்கள்

கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த தலைவர்கள்

கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த தலைவர்கள்
Published on

திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 

கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியை சந்தித்தது மகிழ்ச்சி என்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது எனவும் கூறினார். கருணாநிதியின் மதச்சார்பின்மையை சோனியா காந்தி பாராட்டியிருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், கருணாநிதியை இடதுசாரித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com