“வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறாதது அநீதி” -  வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன்

“வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறாதது அநீதி” - வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன்

“வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறாதது அநீதி” - வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன்
Published on

வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறாதது குறித்து விளக்கியுள்ளார் அமமுக கட்சியின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ல் சசிகலா சிறைக்கு சென்றபிறகு போயஸ் கார்டன் இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இதனால் அங்கு வசித்த சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி உள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு அளித்திருந்தார். ஆனால், இதுவரை சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அமமுக நிர்வாகியும் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான வைத்தியநாதன் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் சசிகலா, இளவரசியின் பெயர்கள் மட்டுமல்லாது, 19 ஆயிரம் அமமுக தொண்டர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் முறையிட்டுள்ளார்.

இதுபற்றி அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ‘’மார்ச் 17ஆம் தேதியன்று தேர்தல் அதிகாரியை சந்தித்து 16ஆம் தேதிதான் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறித்து தெரியவந்ததாக உரிய ஆவணங்களுடன் முறையிட்டேன். மார்ச் 9ஆம் தேதிவரை தனக்கு இதுகுறித்து முடிவெடுக்க அதிகாரம் இருந்ததாகக் கூறினார் அந்த தேர்தல் அதிகாரி. எந்தவித நோட்டீஸும் அனுப்பாமல் பெயர் நீக்கப்பட்டது அநீதி என்றும் எடுத்துரைத்தேன். இதுகுறித்து புகாரும் செய்திருந்தேன்.

ஆனால் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி 19ஆம் தேதிவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் எதனால் அவர் அப்படிக் கூறினார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com