செந்தில்குமார், வழக்கறிஞர்
செந்தில்குமார், வழக்கறிஞர்PT Desk

ஒடிசா ரயில் விபத்து: இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி அவதூறு கருத்து - கன்னியாகுமரி வழக்கறிஞர் கைது!

ஒடிசா ரயில் விபத்தை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி ட்விட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கறிஞரை தக்கலை போலீசார் கைது செய்தனர்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். 52 வயதான இவர், வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு காரணம் இஸ்லாமியர் ஒருவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

சுவாமியார்மடம்
சுவாமியார்மடம்@PTSuman

இந்த நிலையில் செந்தில்குமார் உள் நோக்கத்துடனும் சாதி சமய விரோதத்துடனும் இந்த பதிவை வெளியிட்டுள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தக்கலை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து வழக்கறிஞர் செந்தில்குமார் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார், அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com