ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்

ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்

கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா மதரீதியாக மோதல் ஏற்படும் வகையில் பேசியதாக இடைநீக்கம் செய்யபட்டு இருந்ததை தற்காலிகமாக ரத்து செய்து சட்டக்கல்லூரி பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்

கோவை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி பிரியா என்பவர் வகுப்பறையில் மதரீதியாக மோதல் ஏற்படும் வகையில் பேசியதாகவும், ஆசிரியையை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதால் அந்த மாணவியை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், தேர்வு எழுத வேண்டும் என்பதால் அவரது நலன் கருதி இடைநீக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து கோவை அரசு சட்டக்கல்லூரி பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரியா என்ற மாணவி கடந்த 13 ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே மத ரீதியாக மோதல் ஏற்படும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை கேட்க சென்ற ஆசிரியையை பணி செய்ய விடாமல் தடுத்து அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை போராட வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளதால்,மாணவியின் இந்தச் செயல் மாணவர்களிடையே மத ரீதியான மோதலை உண்டாக்கும் சூழலை உருவாக்கியதாகவும், இதனால் அந்த மாணவியை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு  இருந்தது. இது குறித்து தற்போது விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், இன்னும் சில தினங்களில் தேர்வு வருவதினால் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என பிரியா கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளித்து உள்ளார். அதன்படி மாணவியின் நலனைக் கருத்தில் கொண்டு இறுதி விசாரணை அறிக்கையை பெரும் வரை அவரது இடை நீக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக கோபால கிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com