\
சக மாணவரை கத்தியால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர் - வீடியோ

சக மாணவரை கத்தியால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர் - வீடியோ

சக மாணவரை கத்தியால் வெட்டும் சட்டக்கல்லூரி மாணவர் - வீடியோ
Published on

சென்னை பல்லாவரம் அருகே தனியார் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், சக மாணவரை பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டும் கோர காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும் இறுதியாண்டு படித்து வருகிறார். ஏற்கெனவே கல்லூரியில் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கல்லூரி வளாகம் அருகே இருவருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் ஆவேசமடைந்த கார்த்தி பட்டா கத்தியால் அஸ்வினை சரமாரியாக வெட்டியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், கார்த்தியை தடுத்து அழைத்துச் சென்றனர்.

கை, தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயமடைந்த அஸ்வின், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கார்த்தியைத் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com