வைகோ தேர்தலில் நிற்கலாம் - சட்ட நிபுணர்கள் கருத்து

வைகோ தேர்தலில் நிற்கலாம் - சட்ட நிபுணர்கள் கருத்து

வைகோ தேர்தலில் நிற்கலாம் - சட்ட நிபுணர்கள் கருத்து
Published on

2009-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக , மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. சில பிரிவுகளில் வைகோ விடுவிக்கப்பட்ட நிலையில் தேசத்துரோக பிரிவில் விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு வந்தது. அதன்படி, வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

இது ஒருபுறம் இருக்க, மதிமுக சார்பில் மாநிலங்களவைக்கான தேர்தலில் வைகோ போட்டியிட உள்ளார். இதற்காக அவர் நாளை மனுத்தாக்கல் செய்வதாக இருந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரால் தேர்தலில் நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் பேசிய போது, “உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, பதவியில் இருக்கும் ஒருவர், குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் பதவி இழப்பார். ஆனால் ஒரு நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கொடுக்கப்பட்டால், அவர் தேர்தலில் போட்டியிட தடையில்லை” என்றனர். 

தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “வைகோவுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது தேச துரோக சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (1) அதாவது தகுதிநீக்க சட்டத்தில் இணைக்கப்படவில்லை. மேலும் வைகோவுக்கு ஓராண்டு மட்டுமே சிறை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாம் அதில் தடையில்லை” என்றனர்.

இந்நிலையில் வைகோவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனையை ரத்து செய்யுமாறு வைகோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்காது என சொல்கிறார்களே என்ற கேள்விக்கு என் குரல் ஒலிக்காது என சொல்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com