கந்துவட்டிக்கு எதிராக போராட்டம்: சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது
கந்துவட்டிக் கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் கந்துவட்டிக் கொடுமை காரணமாக தீக்குளித்து மூன்று பேர் இறந்துள்ள நிலையில், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயற்சித்தபோது, காவல்துறையினர் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, நந்தினி மற்றும் அவரது தந்தையை கைது செய்த காவல்துறையினர் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.