stalin, dhoni, udhayanidhi
stalin, dhoni, udhayanidhiCMO TamilNadu twitter page

”எல்லோரையும்போல நானும் தோனி ரசிகன்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

”தமிழகத்தில் உள்ள அனைவரும்போல நானும் ஒரு தோனி ரசிகன்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 8) தொடங்கிவைத்தார். இந்த விழாவின்போது, முதலமைச்சர் கோப்பைக்கான சின்னம், பாடல், இலட்சினை உள்ளிட்டவற்றையும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் விளம்பர தூதருமான தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் போல நானும் ஒரு தோனி ரசிகன். தோனி பேட்டிங்கைப் பார்க்க சேப்பாக்கம் மைதானம் சென்றேன். தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். தோனி சொந்த உழைப்பால் வளர்ந்தவர்; அதனால்தான் இன்று அவர் விளம்பர தூதராக உள்ளார். தமிழ்நாட்டில் பல தோனிகளை உருவாக்க வேண்டும். கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் உருவாக்க வேண்டும்.

stalin, dhoni
stalin, dhoniCMOTamilNadu twitter page

உதயநிதி அமைச்சரான பிறகு மாபெரும் எழுச்சியை விளையாட்டுத் துறை பெற்றுள்ளது. நாள்தோறும் ஏதேனும் ஒரு பணி விளையாட்டுத் துறையில் நடைபெற்று வருகிறது. அவருக்கும் அவர் துறையைச் சார்ந்திருப்பவர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு 44வது ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக நடத்தி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டை விளையாட்டில் முன்னோடி மாநிலமாக மாற்ற, பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் உயரிய ஊக்கத்தொகையும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கையில் மகத்தான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக வழங்குகிறேன்” என்றார்.

stalin, dhoni, udhayanidhi
stalin, dhoni, udhayanidhiCMOTamilNadu twitter page

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தை விளையாட்டின் தலைநகரமாக உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டுத் துறை உயர்வதற்கு இந்த அறக்கட்டளை மிக முக்கியப் பங்கு வகிக்கும். தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு கட்டமைப்பு இருந்தாலும் அதனை மேம்படுத்த இந்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டம் உதவும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோனி இருவருமே தங்கள் உழைப்பால் வளர்ந்த நபர்கள். தமிழ்நாடு சாம்பியன்ஸ் திட்டத்திற்கு தற்போது 23.50 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிய முதலமைச்சர் விளையாட்டுத் துறைக்கும் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com