\
கோயில்களில் பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்

கோயில்களில் பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்

கோயில்களில் பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்
Published on

கோயில்களில் முதல்முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டேல் இரண்டு நாள் பயணமாக, தஞ்சை வந்துள்ளார். மாரியம்மன் கோயிலில், முதல்முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார். இதற்காக ஏழு லட்ச ரூபாய் மதிப்பிலான பிரத்யேக இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com