\
கோச்சடையான் கடன் வழக்கு: லதா ரஜினிகாந்த் விளக்கம்

கோச்சடையான் கடன் வழக்கு: லதா ரஜினிகாந்த் விளக்கம்

கோச்சடையான் கடன் வழக்கு: லதா ரஜினிகாந்த் விளக்கம்
Published on

விளம்பர நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு தொடர்பாக, லதா ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். 

கோச்சடையான் படத்துக்கு கொடுத்த கடன் தொகையில் ரூ.6.20 கோடி லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டுமெனக்கோரி, ஏட் பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதுதொடர்பாக வரும் 10ஆம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் விசாரணையை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியதாக செய்திகள் வெளியாகின. 

இதை மறுத்த லதா ரஜினிகாந்த், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் லதா ரஜினிகாந்த் தரப்பு அறிவுறுத்தல் ஏதுமின்றி, அவரது தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தைப் பதிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரச்னைக்குள் செல்லாமல், மனுக்களின் தகுதி மீதான விசாரணையை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளதாகவும் லதா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இறுதி விசாரணைக்காக வரும் 10ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com