சென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து, சென்னையில் நேற்று அதிகமான மழை பெய்தது. குரோம்பேட்டை, பம்மல், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 மணி நேரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையின் மற்ற பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதிகாலை 2.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 8 சென்டிமீட்டர், கொளப்பாக்கத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நங்கநல்லூர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. அதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது