சிவகாசியில் இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை விறுவிறுப்பு: கடும் போக்குவரத்து நெரிசல்

சிவகாசியில் இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை விறுவிறுப்பு: கடும் போக்குவரத்து நெரிசல்
சிவகாசியில் இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை விறுவிறுப்பு: கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிவகாசியில் பட்டாசு வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் இடமாக சிவகாசி விளங்குகிறது. இங்கு சுமார் 1100 பட்டாசு ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துள்ள பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு, சரவெடி பட்டாசு தயாரிக்க தடை, பேரியம் நைட்ரேட் ரசாயன மூல பொருளுக்கு தடை உள்ளிட்ட நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி வழக்கத்தை விட 30 சதவீதம் குறைந்துள்ளது.

மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வு காரணமாக பட்டாசு விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறும் பட்டாசு உற்பத்தியாளர்கள் அதிகாரிகளின் தொடர் ஆய்வில் விதிமுறையை மீறியதாக 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் பட்டாசு உற்பத்தி குறைவாக இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு பட்டாசுக்கான தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் சிவகாசி பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பட்டாசுகளின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ள போதிலும் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி முறையில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடியாக சிவகாசிக்கு வருகை தந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

பெரும்பாலான பட்டாசு விற்பனை நிலையங்களில் வெளியூர்களுக்கான பார்சல் நடைமுறை நிறுத்தப்பட்டதால் தீபாவளியை கொண்டாட சென்னை, கோவை, மதுரை, கோயம்புத்தூர் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நேரடியாக சிவகாசிக்கு வருகை தருவதால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வாகன நெருக்கடி மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் மற்றும் ஜவுளி பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com