Last Six Assembly Elections, Rising Voter Turnout
TN election PT

6 சட்டமன்றத் தேர்தல்கள் | அதிகரித்து வரும் வாக்குப்பதிவு.. முழு விவரம்!

தமிழகத்தில் 2006ஆம் ஆண்டில் இருந்து 6 தேர்தல்களில் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவு வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
Published on

2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 3 கோடியே 29 லட்சத்து 91 ஆயிரத்து 555 பேர் வாக்களித்தனர். அப்போது திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது. அதேநேரத்தில் முந்தைய தேர்தலைக் காட்டிலும் 49 லட்சத்து 54 ஆயிரத்து 241 பேர் அதிகம் வாக்களித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 3 கோடியே 68 லட்சத்து 45 ஆயிரத்து 373 பேர் வாக்களித்தனர்.

people waiting to cast vote
people waiting to cast vote web

அப்போது அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலைவிடவும் 38 லட்சத்து 53 ஆயிரத்து 818 பேர் அதிக எண்ணிக்கையில் வாக்களித்திருந்தனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 26 லட்சத்து 46 ஆயிரத்து 591 பேர் வாக்களித்தனர். மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

அது சந்தித்த முந்தைய தேர்தலைவிடவும் 58 லட்சத்து ஆயிரத்து 218 பேர் கூடுதலாக வாக்குகளைப் பெற்றிருந்தது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 62 லட்சத்து 36 ஆயிரத்து 716 பேர் வாக்களித்தனர். திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. முந்தைய தேர்தலைவிடவும் 35 லட்சத்து 90 ஆயிரத்து 125 பேர் கூடுதலாக வாக்களித்திருந்தனர். இப்போதைய சட்டமன்றத் தேர்தலில் 4 கோடியே 91 லட்சம் பேர் வாக்களித்திருக்கின்றனர். முந்தைய தேர்தலைவிடவும் 28 லட்சத்து 63 ஆயிரத்து 284 பேர் அதிகம் வாக்களித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com