கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலி பணியிடங்கள்! விண்ணபிக்க கடைசி தேதி?

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
காலி பணியிடங்கள்
காலி பணியிடங்கள்முகநூல்

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, கடைசியாக இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை வருமா.. கொளுத்தும் கோடையில் ஏரிகளின் நிலவரம் என்ன?

இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கும் மே.19ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மாற்றம் செய்த விண்ணப்பத்தில், வேறு மாற்றங்களை செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com