\
“மொழி அரசியல் செய்வதற்கு அல்ல” - ஓ.பி.ரவீந்திரநாத்

“மொழி அரசியல் செய்வதற்கு அல்ல” - ஓ.பி.ரவீந்திரநாத்

“மொழி அரசியல் செய்வதற்கு அல்ல” - ஓ.பி.ரவீந்திரநாத்
Published on

தாய் மொழி தமிழை யாராலும் அழிக்க முடியாது என தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க விழாவில் பேசிய ரவீந்திரநாத்குமார், “உலகின் தொன்மை மொழியான தாய் மொழி தமிழை யாராலும் அழிக்க முடியாது. தாய் மொழி தமிழ் தெய்வமொழி. சித்தர்களும், அறிஞர்களும், சிந்தனையாளர்களும், இலக்கியவாதிகளும் படித்த அமுதமொழி தமிழ் மொழி.

ஒரு மொழியை தெரிந்து கொள்வது ஒரு விழியை திறந்து வைப்பதற்கு சமம். எந்த மொழியும் மனித இனத்திற்கு சொந்த மொழி போலத்தான்.  மொழியை விரும்பினால் படிக்கலாம். இல்லையேல் அப்படியே விட்டுவிடலாம். மொழி அரசியல் செய்வதற்கு அல்ல” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com