நில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறார்: லதா ரஜினிகாந்த் பள்ளி நிர்வாகம் விளக்கம்

நில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறார்: லதா ரஜினிகாந்த் பள்ளி நிர்வாகம் விளக்கம்

நில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறார்: லதா ரஜினிகாந்த் பள்ளி நிர்வாகம் விளக்கம்
Published on

லதா ரஜினிகாந்த்தின் ஆஷ்ரம் பள்ளியில் எழுந்துள்ள பிரச்னை தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆஷ்ரம் பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிண்டியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ‌தங்கள் பள்ளி செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடத்தின் உரிமையாளர் அவரது குடும்பப் பிரச்னை காரணமாக, பள்ளி நிர்வாகத்துக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் வாடகை கொடுப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்றும், ஆனால் நியாயமற்ற முறையில் கூடுதல் தொகையை கேட்டு நில உரிமையாளர் வற்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஊடகங்களைப் பயன்படுத்தி இடத்தின் உரிமையாளர் தங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு பள்ளி நிர்வாகத்தையும், மாணவர்களையும், பெற்றோரையும் நிலத்தின் உரிமையாளர் துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு தவறான தகவல்களை அளித்த நில உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் ஆஷ்ரம் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com