நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நம்பாலக்கோட்டையில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள நம்பாலகோட்டை பகுதியில் காதி துறையால் பயன்படுத்தப்பட்ட வந்த நிலம் உள்ளது. காதி நிறுவனம் மூடப்பட்ட நிலையில்,
தற்போது அந்த நிலம் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில் அந்த நிலத்தை ஆக்கிரமித்து சிலர் கட்டிடம் கட்டுவதாக வருவாய் துறையினருக்கு புகார்
வந்தது. புகாரின் அடிப்படையில் அங்கு சென்று ஆய்வு செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், அரசு நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை
மேற்கொண்டனர். மேலும் அந்த நிலத்தில் இது அரசிற்கு சொந்தமான நிலம் எனவும் அறிவிப்பு ஒட்டியுள்ளனர். இந்த நிலத்தில் அத்துமீறி நுழைந்து பணிகளை
மேற்கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.