‘திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.13 கோடி’ - கடை உரிமையாளர் பேட்டி

‘திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.13 கோடி’ - கடை உரிமையாளர் பேட்டி
‘திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.13 கோடி’ - கடை உரிமையாளர் பேட்டி

திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.13 கோடி என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தனது நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக அதன் உரிமையாளர் கிரண் குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தரை தளத்தில் வைக்கப்பட்டிருந்த 700 முதல் 800 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு 13 கோடி ரூபாய். இதில் தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளும் அடங்கும். திருச்சி மாநகர காவல்துறை பெரும் உதவியாக இருக்கின்றனர். குற்றவாளிகளை கைது செய்து நகைகளை ஒப்படைப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.

முன்னதாக, திருச்சி மலைக்கோட்டை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியின் கிளையின் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுமார் 100 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. 7 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com