‘இதுக்கு proofஆ கொடுக்கமுடியும்’ - நடிகை அபிராமி கருத்துக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேச பதில்

பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக நடிகை அபிராமி தெரிவித்த கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணன்PT

அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் அளித்த பாலியல் புகார் காரணமாக மாணவர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக நடிகை அபிராமி தெரிவித்த கருத்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை நடிகை அபிராமி கடந்த 6-ம் தேதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அபிராமியின் கருத்து தொடர்பாக நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இது மிகவும் தவறான விஷயம். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு, அங்கு இத்தனை குழந்தைகள் போராட்டம் பண்ணும்போது, ஹரி பத்மனுக்கு நான் கேரண்டி என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்.

நடிகை அபிராமி,
நடிகை அபிராமி,PT

இதற்கெல்லாம் proof-ஆ கொடுக்க முடியும். ஒரு பெண் குழந்தை ஸ்கூலில் இவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொல்லும்போது அங்கு என்ன நடந்திருக்கிறது என்று அந்தக் குழந்தைக்கு மட்டும்தான் தெரியும். இதற்கெல்லாம் proof ஆ கொடுக்க முடியும்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com