தொடர் கனமழை; திறக்கப்படும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தொடர் கனமழை; திறக்கப்படும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தொடர் கனமழை; திறக்கப்படும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Published on

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்பட உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் கனமழையால் நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரியின் நீர் மட்டம் 21 புள்ளி 20 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 19 புள்ளி 30 அடியாக உள்ளது. காலை நிலவரப்படி ஏரிக்கு சுமார் ஆயிரத்து 400 கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், காலை 11 மணியளவில் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளது.

விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படும் என்றும், ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்தூர் கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் பகுதி மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் பிற்பகல் 1.30 மணிக்கு உபரி நீர் திறக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபர்நீர் செல்லும் பகுதிகளான நத்தம், குன்றத்தூர், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், பூந்தண்டலம், எருமையூர், திருமுடிவாக்கம், சிருகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com