தமிழ்நாடு
தொடர் மழை: காஞ்சிபுரத்தில் 66 ஏரிகள் நிரம்பியது
தொடர் மழை: காஞ்சிபுரத்தில் 66 ஏரிகள் நிரம்பியது
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 66 ஏரிகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 912 ஏரிகளில் 66 ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மழை நீடிக்கும் பட்சத்தில், மற்ற ஏரிகளும் விரைவில் நிரம்பும் வாய்ப்புளளளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

