இளம்பெண் கொலை வழக்கில் திருப்பம்: 2 போலீசார் உடந்தை (வீடியோ)

இளம்பெண் கொலை வழக்கில் திருப்பம்: 2 போலீசார் உடந்தை (வீடியோ)
இளம்பெண் கொலை வழக்கில் திருப்பம்: 2 போலீசார் உடந்தை (வீடியோ)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இளம்பெண் கொலையில் உடந்தையாக இருந்ததாகக் கூறி 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்குடி காவல்நிலையம் எதிரே கடந்த 17 ஆம் தேதி டாக்டர் இளஞ்சேரனின் மனைவி கொலை செய்யப்பட்டார். இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில், அவர்களே அப்பெண்ணை கொலை செய்தது அம்பலமானது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மாமியாரின் அண்‌ணனும், திருவாரூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளருமான சிவகுமார், அவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோர் கொலைக்கு உதவியதாக வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையைச் சேர்ந்த சிவக்குமார், செந்தில்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இருவரையும் மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com