சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கராஜ், கடந்த நான்காம் தேதி நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு 9-ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து தங்கராஜின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய அவரது உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது இதயம், சிறுநீரகங்கள், தோல், கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டன.