வண்ணாரப்பேட்டை: மண் சரிவிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர் உயிரிழப்பு

வண்ணாரப்பேட்டை: மண் சரிவிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர் உயிரிழப்பு
வண்ணாரப்பேட்டை: மண் சரிவிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர் உயிரிழப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் சிக்கிய தொழிலாளி சின்னதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் முதல் தெருவில் போர்வெல் குழியில் மண் சரிந்தபோது 3 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் இரண்டு பேர் ஏற்கெனவே மீட்கப்பட்டனர். மூன்றாவது தொழிலாளியை மீட்கும் பணி 3 மணி நேரம் நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

15 அடி பள்ளத்தில் மண் மூடிய நிலையில், 10 அடிக்கு கீழே தொழிலாளி புதையுண்டிருப்பதாக தகவல் வெளியானது. மீட்புப் பணியின்போது மண் சரிவு ஏற்படாமல் இருக்க பள்ளத்தில் உறைகள் இறக்கப்பட்டன. மண்ணுக்குள் சிக்கிய 21 வயது தொழிலாளிக்கு திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. தொழிலாளிக்கு சுவாசக் காற்று கிடைக்க ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் காற்று குழிக்குள் செலுத்தப்பட்டது. இந்நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com