\
கிணற்றை சுத்தம் செய்ய இறங்கிய தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றை சுத்தம் செய்ய இறங்கிய தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றை சுத்தம் செய்ய இறங்கிய தொழிலாளி உயிரிழப்பு
Published on: 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பயன்படுத்தப்படாத கிணற்றை சுத்தம் செய்ய இறங்கிய தொழிலாளி உயிரிழந்தார்.

குறிஞ்சிப்பாடி பகுதியில் ரங்கராஜ் என்பவர் தனது வீட்டின் பின்புறமுள்ள பயன்படுத்தப்படாத கிணற்றை சுத்தம்செய்ய இரண்டு கூலித் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார். கிணற்றுக்குள் இறங்கிய முருகன் என்ற தொழிலாளி மயங்கி உள்ளேயே விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர்கிணற்றில் விழுந்து கிடந்த முருகனை மீட்டனர்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com