\
தஞ்சாவூர்
தஞ்சாவூர்முகநூல்

தஞ்சாவூர்|திமுக கொடிக்கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தஞ்சாவூரில் திமுக கொடிக்கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Published on

தஞ்சாவூரில் திமுக கொடிக்கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூரில் வரும் 7-ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக, சாந்த பிள்ளை கேட் பகுதியில் திமுக கட்சிக்கொடி ஊன்றும் பணி நடந்து வந்தது.

தஞ்சாவூர்
கேரளா| ரயில்வே தடங்களை சுத்தம் செய்தபோது ரயில் மோதி உயிரிழந்த 4 தமிழர்கள்.. சோகத்தில் சேலம் கிராமம்!

இதில் கீழவாசல் பகுதியை சேர்ந்த நாகராஜன் டிரான்ஸ்பார்மர் அருகில் இரும்புக் குழாயில் கொடியை கட்டி ஊன்ற முயற்சித்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கிருந்த கொடிக் கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com