\
கன்னியாகுமரி: ரப்பர் ஆலையில் இயந்திரம் வெடித்து தொழிலாளி பலி

கன்னியாகுமரி: ரப்பர் ஆலையில் இயந்திரம் வெடித்து தொழிலாளி பலி

கன்னியாகுமரி: ரப்பர் ஆலையில் இயந்திரம் வெடித்து தொழிலாளி பலி
Published on

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் ரப்பர் தொழிற்சாலையில் இயந்திரம் வெடித்து வட இந்திய தொழிலாளி பலியானார். 5 தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விளை பகுதியில் கேரளாவை சேர்ந்த குரியன் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவில் இந்த தனியார் ஆலையில் 10 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஒரு இயந்திரம் இன்று காலை வெடித்துச் சிதறியதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பல்லி மகத் என்ற 32 வயதான தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் 5 தொழிலாளர்களுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தொழிற்சாலையில் இயந்திரம் வெடித்து வட இந்திய தொழிலாளி பலியான சம்பவம் தக்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com