போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை

அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன.

இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது. அதன்படி டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை
”கொரோனா காலத்தில் எடியூரப்பா 40 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தார்” - பாஜக மூத்த தலைவர் குற்றச்சாட்டு

இதில் சிஐடியு தலைவர் சவுந்திரராஜன், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட 24 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com