“தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை

தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
எல்.முருகன்
எல்.முருகன்புதிய தலைமுறை

செய்தியாளர்: ராஜன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்....

“நாட்டில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார்.

எல்.முருகன்
கன்னியாகுமரி | விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி தியானம்... வீடியோ வெளியீடு!

மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழக காவல்துறையினர் இரண்டு நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீதும், அவரது தாய் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எல்.முருகன்
கோவை: குப்பையை அகற்றக்கோரி புகாரளித்த இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் - என்ன நடந்தது?

2014 ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 2027க்குள் 3வது இடத்தை அடைந்து விடுவோம் என்பது, பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி. நிச்சயம் நாம் அதை அடைவோம். தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com