\
மத்திய மீன்வளத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார் எல்.முருகன்- முதல்வர் வாழ்த்து

மத்திய மீன்வளத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார் எல்.முருகன்- முதல்வர் வாழ்த்து

மத்திய மீன்வளத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார் எல்.முருகன்- முதல்வர் வாழ்த்து
Published on: 

மத்திய மீன்வளத்துறை இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு தொலைபேசியில் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நேற்று பதவியேற்றார். நேற்று அமைச்சராக பதவியேற்ற நிலையில் இன்று மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை  இணையமைச்சராக அவர் பொறுபேற்றுள்ளார்.

இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன், தமிழக மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படும் என உறுதியளித்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

1997-ஆம் ஆண்டு பாஜகவின் மாணவர் அமைப்பில் தனது பயணத்தைத் தொடங்கிய எல்.முருகன் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவரானார். இவர் தற்போது மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com