“முதலீட்டாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமை” - எல்.முருகன்

“முதலீட்டாளர்கள் மாநாடு வரவேற்கத்தக்கது என்றாலும், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? அவர்களுக்கு தேவையான வசதிகளை இங்கு செய்து கொடுக்க வேண்டும்” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
L.Murugan
L.Muruganfile

செய்தியாளர்: S.ஐஸ்வர்யா

கோயம்புத்தூர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் 'அகண்ட தமிழ் உலகம்' அமைப்பின் நான்காவது சர்வதேச மாநாடு கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு சிரைப்புரையாற்றினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்...

PM Modi
PM Modipt desk

“அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் 4வது மாநாட்டில் தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் வணிகம் பற்றி பேசப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. உலகில் எங்கு சென்றாலும் திருக்குறள் குறித்து பிரதமர் பேசுகிறார். காசி தமிழ்ச் சங்கமம் மற்றும் சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஐநா சபையில் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் மோடி அவர்களால் குறிப்பிடப்பட்டது. இவ்வாறு பல்வேறு வகையில் பிரதமர் மோடி தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

L.Murugan
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்னென்ன?

தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய அரசு சார்பில் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்குவதற்கான எளிமையான மற்றும் வெளிப்படைத் தன்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும். ஏற்கனவே போர்டு நிறுவனம் தமிழகத்தில் இருந்து வெளியே சென்றது. அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிப்படைந்தனர். இதுபோல் அல்லாமல் தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்குள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

mk stalin
mk stalinpt web

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மூன்று சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை மின் கட்டண கொள்ளை என்றுதான் பார்க்க வேண்டும். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

L.Murugan
“உலகிலேயே முதலீடு செய்ய சிறப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”- உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய அமைச்சர்

சீமானுக்கு பதில் சொல்ல வேண்டிய காலத்தில் நாம் இல்லை. பிரதமர் தமிழக மக்கள் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்பது மக்களுக்குத் தெரியும். தமிழ் மொழி குறித்து அவரைப் போன்று இங்கு யாரும் பெருமையாக பேசவில்லை. அவருக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை.

seeman
seemanfile

சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் பதிவு செய்துள்ளோம். கேரள அரசு முற்றிலும் தவறான அணுகுமுறையை செய்கிறது. குடிநீர், கழிப்பிடம் என எந்த அடிப்படை வசதியும் பக்தர்களுக்கு அங்கு செய்யப்படவில்லை.

வெள்ள நிவாரண பணிகள் தமிழகத்தில் நடந்த போது I.N.D.I.A கூட்டணி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். போகிற போக்கில் பிரதமரை சந்தித்து வெள்ள நிவாரணம் கேட்பதா?

மத்திய அரசு, மத்திய அரசின் ஏஜென்சிகள் முன்னெச்சரிக்கை விட்டும், வெள்ள நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாமல் கூட்டணி குறித்து அவர் பேச சென்றார்.

ramar kovil
ramar kovilpt desk

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாஜக சார்பில் மக்களை அழைத்துச் செல்வோம் எனக் கூறிய பின்பு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அவர்களும் அழைத்துச் செல்வதாக ஒரு வெற்று அறிக்கையை கூறியுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து ‘ராமர் கோவில் விழாவுக்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நிகழ்ச்சி அன்றுதான் யார் யார் அழைக்கப்பட்டுள்ளார்கள் என தெரியும். கோவில் நிர்வாகத்தினர் அதனை முடிவு செய்து அழைப்பார்கள்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com