முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே. சுதீஷ் சந்திப்பு
Published on

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் பேசினார்.

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கு நல்லது என்றால் அதனை நாங்கள் வரவேற்போம் அதேநேரத்தில் அது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால், அதனை எல்லோருக்கும் முன்னதாக தேமுதிக எதிர்க்கும். குடியுரிமைச் சட்டம் எந்த ஒரு மதத்திற்கும் எதிரானது அல்ல. இச்சட்டத்தால் இங்கு வாழும் மக்களுக்கு பிரச்னை இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும். இதனை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார்.

மேலும் டெல்லி வன்முறை தொடர்பான ரஜினியின் கருத்திற்கு பதில் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

அதனையடுத்து தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது அதிமுகவினர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக கூறினார்கள். நாங்கள் கூட்டணி தர்மத்துடன் இருக்கிறோம். இன்னும் இரு தினங்களில் தேமுதிக நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் உரிமையை கேட்போம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ், சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். அப்போது தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் தேமுதிகவிற்கு இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து முதல்வரிடம் சுதீஷ் பேசியதாக தெரிகிறது. பிரேமலதா இன்னும் இரு தினங்களில் முதல்வரை சந்திப்போம் எனக் கூறி இருந்த நிலையில் உடனடியாக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com