தமிழ்நாடு
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி முதல்வர்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி முதல்வர்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
திருவண்ணாமலையில் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பள்ளி முதல்வரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் குமார் தாக்கூர் என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார். இவர் பெங்களூருவில் பணிபுரிந்தபோது பாலியல் புகாரில் சிக்கியதால், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், திருவண்ணாமலையில் உள்ள பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். இதனையறிந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி முதல்வரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளி முதல்வர் குமார் தாக்கூரை அப்பணியில் இருந்து விடுவித்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார்.