குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால், குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால், முன்னெச்சரிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.