தமிழ்நாடு
வீட்டருகே நம்பர் பிளேட் இல்லாத வாகனம்: குஷ்பு ட்வீட், போலீஸ் நடவடிக்கை!
வீட்டருகே நம்பர் பிளேட் இல்லாத வாகனம்: குஷ்பு ட்வீட், போலீஸ் நடவடிக்கை!
தனது வீட்டின் அருகில் கேட்பாரற்ற நிலையில் சரக்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக நடிகை குஷ்பு ட்வீட் செய்திருந்த நிலையில், அந்த வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடந்த 10 நாட்களாக சரக்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அதில் பதிவெண் இல்லாததால் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்ட மறுநாளே போக்குவரத்து காவல்துறையினர் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், தகவலுக்கு நன்றி தெரிவித்த காவல்துறையினர், GCTP என்ற செயலி மூலம் புகாரை தெரிவிக்குமாறு குஷ்புவை கேட்டுக் கொண்டனர். சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வேண்டுகோள்படி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதாக குஷ்புவும் பதிலளித்துள்ளார்.