"எங்கள் ஹீரோ எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி" : குஷ்பு

"எங்கள் ஹீரோ எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி" : குஷ்பு

"எங்கள் ஹீரோ எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி" : குஷ்பு
Published on

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகை குஷ்பு.

பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் காலத்தில்தான், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக பாஜக நான்கு தொகுதிகளைப் பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. அதுமட்டுமல்ல, சினிமா பிரபலங்கள் பலரையும் முருகன் தலைவராக பொறுப்பேற்றப்பிறகு கட்சிக்குள் கொண்டுவந்தார். மேலும், தாராபுரம் தொகுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோற்றுப் போனார்.

இந்த நிலையில், அவரின் உழைப்பை மதிக்கும் விதமாக பாஜக புதிதாக மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராக பதவி அளித்துள்ளது. அவருக்கு, பலத்தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், நடிகை குஷ்பு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முருகன் பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோதுதான், யாரும் எதிர்பாராத வகையில் குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”டெல்லியில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எங்கள் ஹீரோ முருகன் பதவி ஏற்றபிறகு, அவர் அலுவலத்தில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பாஜகவில் அவர் தலைவராக இருந்த பதவிக்காலம்தான் என்னை இந்த கட்சியில் இணைய வைத்தது . நான் எப்பொழுதும் அதற்காக அவருக்கு நன்றியுடன் இருப்பேன். வாழ்த்துக்கள் ஜி” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com